​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏ.சி பழுது பார்த்த போது திடீரென சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலி...!

Published : Mar 26, 2023 7:02 AM

ஏ.சி பழுது பார்த்த போது திடீரென சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலி...!

Mar 26, 2023 7:02 AM

கும்பகோணம் அருகே பழுதடைந்த ஏசி கம்ப்ரஸரை சீரமைத்து பொறுத்தும் போது அதிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழந்தார்.

திருநாகேஸ்வரம் மேற்கு மடவிலாக்கத்தில் வசிக்கும் மணிமாறன் என்பவரது வீட்டில் ஏசி கம்ப்ரஸர் பழுதடைந்துள்ளது.இதனை சீரமைக்கும் பணியில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் மற்றும் சேக் அலாவுதீன் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கம்ப்ரஸர் பெட்டிக்கு மின் இணைப்பு கொடுக்கும் பொழுது பலத்த சத்தத்துடன் அதிலிருந்து சிலிண்டர் வெடித்ததில்  இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதில் கணேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.