​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து... தலைமறைவான கல்லூரி மாணவனை பிடிக்க போலீசார் தீவிரம்..!

Published : Mar 26, 2023 6:51 AM

காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து... தலைமறைவான கல்லூரி மாணவனை பிடிக்க போலீசார் தீவிரம்..!

Mar 26, 2023 6:51 AM

கோவை சுந்தராபுரம் பகுதியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு, தலைமறைவான கல்லூரி மாணவனை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

குனியமுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீராம், பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பெண் பணிபுரியும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்ற ஸ்ரீராம், தன்னை காதலிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அப்பெண்ணை சரமாரி தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.

இதில், பலத்த காயமடைந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.