​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நவாஸ் ஷெரீப்பை லாகூர் விமான நிலையத்திலேயே கைது செய்ய நடவடிக்கை

Published : Jul 13, 2018 12:18 PM



நவாஸ் ஷெரீப்பை லாகூர் விமான நிலையத்திலேயே கைது செய்ய நடவடிக்கை

Jul 13, 2018 12:18 PM

லண்டனில் இருந்து பாகிஸ்தான் வரும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைது செய்யப்பட உள்ள நிலையில், லாகூர் நகரம் முற்றிலும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகளின் ரகசிய வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான பனாமா ஆவணங்கள் வெளியே கசிந்தபோது, நவாஸ் ஷெரீஃப் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது. இதன் அடிப்படையில், லண்டனில் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கியது தொடர்பாக, ஊழல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அவரது மகள் மரியத்திற்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், லண்டனில் இருந்து இன்று பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரீஃபும், அவரது மகள் மரியமும் லாகூரில் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட உள்ளனர்.

இதை முன்னிட்டு லாகூர் நகரம் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நவாஷ் ஷெரீஃபின் கட்சியினர் போராட்டங்கள் நடத்துவதை தடுக்க முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.