​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கணவருடன் தகராறு.. ரயில் முன் பாய்ந்து ஆசிரியை விபரீத முடிவு

Published : Mar 22, 2023 3:24 PM

கணவருடன் தகராறு.. ரயில் முன் பாய்ந்து ஆசிரியை விபரீத முடிவு

Mar 22, 2023 3:24 PM

திருப்பத்தூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில், அரசு பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார்.

மோட்டூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த அனிதா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பெரியார் நகரில் கணினி மையம் நடத்தி வந்த சதாசிவம் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், நேற்றிரவு நீண்ட நேரமாகியும் சதாசிவம் வீட்டிற்கு வராததால் அனிதா அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது, போனில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, சதாசிவம் போனை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனிதா, கிருஷ்ணகிரி மேம்பாலம் அருகே குமரியில் இருந்து புனே செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார்.

அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.