​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் சோதனை.. கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் என லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

Published : Mar 22, 2023 10:39 AM

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் சோதனை.. கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் என லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

Mar 22, 2023 10:39 AM

ஈரோடு மாநகராட்சி ஆணையரும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவருமான சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளராக பணியாற்றியவர் சிவக்குமார். 

பல்லாவரம் நகராட்சி ஆணையாளராக சிவக்குமார் பணியாற்றியபோது பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு, லஞ்சமாக பணம் பெற்று அளவுக்கு அதிமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக எழுந்த புகாரின்பேரில், லஞ்சஒழிப்புத்துறை ஆய்வாளர் தலைமையிலான போலீசார், அவரது இல்லத்தில் 9 மணிநேரமாக சோதனை மேற்கொண்டனர்.

இதில், கணக்கில் வராத ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.