​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீச்சல் குளத்தில் மினி நீர்மூழ்கிப் படகுகளின் பந்தயம்

Published : Jul 13, 2018 11:29 AM



நீச்சல் குளத்தில் மினி நீர்மூழ்கிப் படகுகளின் பந்தயம்

Jul 13, 2018 11:29 AM

இங்கிலாந்தின் கோஸ்போர்ட் பகுதியின் பெரிய நீச்சல் குளத்தில் மினி நீர்மூழ்கி படகுகளின் பந்தயம் நீருக்கடியில் நடத்தப்பட்டது.

வழக்கமான டீசல் படகுகளின் பந்தயம் போல் அல்லாமல் இது ஸ்கூபா டைவர்களின் ஆக்ரோஷமான பெடலிங் மூலம் நடைபெற்றது. சுமார் ஐந்தரை அடி ஆழமான நீருக்கடியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயம் போல் இது காட்சியளித்தது.

சர்வதேச அளவிலான இந்த பந்தயத்தில் பல்வேறு நாடுகளின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களின் மாதிரிகள் பங்கேற்றன. சிறிய தடைகள் இருந்தாலும் வேகம் பிடித்த போது இது எல்லா பந்தயங்களைப் போலவே உற்சாகமான வரவேற்பை பெற்றது.