​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2 நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இன்று இந்தியா வருகை

Published : Mar 20, 2023 6:41 AM

2 நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இன்று இந்தியா வருகை

Mar 20, 2023 6:41 AM

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இன்று இந்தியா வருகிறார்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில், இரு நாட்டு தலைவர்களும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க உள்ளனர்.

மேலும், இந்த சந்திப்பின் போது பல்வேறு துறைகளில் இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜி20 தலைமை பொறுப்பை இந்தியாவும், ஜி7 தலைமை பொறுப்பை ஜப்பானும் ஏற்று உள்ள நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.