​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிசம்பர் மாதத்தில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரேல் முடிவு

Published : Jul 12, 2018 10:34 PM



டிசம்பர் மாதத்தில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரேல் முடிவு

Jul 12, 2018 10:34 PM

டிசம்பர் மாதத்தில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

நிலவில் விண்கலத்தை தரை இறக்கிய நாடு என்கிற பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இணைய இஸ்ரேல் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்பேஸ் ஐ.எல் இணைந்து பல்வேறு தரப்பில் இருந்து 600 கோடி ரூபாய் நிதி திரட்டி 585 கிலோ எடையுடன் விண்கலத்தை தயாரித்துள்ளன.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் வரும் டிசம்பர் மாதத்தில் விண்கலமானது ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடைபெற்றால் அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி, விண்கலமானது நிலவில் தரை இறங்கும்.