​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அமெரிக்க அரசு பெற்றோருடன் சேர்ப்பு

Published : Jul 12, 2018 9:39 PM



சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அமெரிக்க அரசு பெற்றோருடன் சேர்ப்பு

Jul 12, 2018 9:39 PM

மெக்சிகோவில் இருந்து அமெரிக்கவில் சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அமெரிக்க அரசு பெற்றோருடன் சேர்த்து வைத்துள்ளது.

பிரிக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றோருடன் சேர்த்து வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விரைவில் சேர்த்து வைக்கவும், மற்ற குழந்தைகளை ஜூலை 26க்குள் சேர்த்து வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்த்து வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். சேர்த்துவைக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் மகிழ்ச்சியாக விளையாடினர். இதனிடையே குற்றச்சாட்டுகளின் பேரில் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டவர்கள் உள்ளிட்டோரின் குழந்தைகளை சேர்த்துவைக்க இயலாமல் இருப்பதாக அமெரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.