​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாய்லாந்து குகையில் 17 நாட்களாக சிக்கித் தவித்தசிறுவர்கள் மீட்கபப்ட்டது தொடர்பான புகைப்படங்களை வெளியீடு

Published : Jul 12, 2018 9:27 PM



தாய்லாந்து குகையில் 17 நாட்களாக சிக்கித் தவித்தசிறுவர்கள் மீட்கபப்ட்டது தொடர்பான புகைப்படங்களை வெளியீடு

Jul 12, 2018 9:27 PM

குகையில் 17 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவர்கள் மீட்கபப்ட்டது தொடர்பான புகைப்படங்களை தாய்லாந்து கடற்படை வெளியிட்டுள்ளது.

image

image

பயிற்சியாளருடன் சென்ற ஜூனியர் கால்பந்து அணி சிறுவர்கள் 12 பேர் தாம் லுவாங் நாங் நான் ((tham luang nang non)) குகையின் வெகு உள்ளடங்கிய பகுதியில் மழை வெள்ளத்துக்கிடையே சிக்கிக்கொண்டனர். ஏற்றமும் இறக்கமுமான, குறுகிய மற்றும் சிக்கலான பாதைகளைக் கொண்ட குகையில் இருந்து தாய்லாந்து மட்டுமன்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு மீட்டனர்.

image

image

image

குகைக்குள் தவழ்ந்து சென்றும், பல மீட்டர் உயரத்துக்கு சூழ்ந்த வெள்ளத்தில் நீந்தியும், குறுகலான பாதைகளை சமாளித்தும், கைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு சென்றும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு 13 பேரையும் மீட்புக் குழுவினர் 3 கட்டங்களாக மீட்டனர்.  இந்நிலையில் தாய்லாந்து கடற்படை மீட்பு பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.