​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொன்.ராதாகிருஷ்ணன் விஷமத்தனமான கருத்தை பரப்புகிறார் - ஜெயக்குமார்

Published : Jul 12, 2018 7:07 PM



பொன்.ராதாகிருஷ்ணன் விஷமத்தனமான கருத்தை பரப்புகிறார் - ஜெயக்குமார்

Jul 12, 2018 7:07 PM

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவிவிட்டதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விஷமத்தனமான கருத்தை பரப்பி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் தியாகராயர் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற முறையில், அங்கு புதுப்பிக்கப்பட்ட கலையரங்க திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் மருத்துவக் கல்லூரியில் சேர ஆசைப்பட்டதாகவும், அது கிடைக்கவில்லை என்பதற்காக தளர்ந்துவிடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தமிழக அரசு பற்றி சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டுகள் உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அது வெறும் சிஏஜி அறிக்கைதான் என்றும், அந்தந்த துறைசார்ந்தவர்கள் உரிய நேரத்தில் பதிலளிப்பார்கள் என்றும் அவர் பதிலளித்தார். வரி ஏய்ப்புக்காக வருமான வரித்துறை சோதனை நடத்தியதையும், முட்டை கொள்முதலையும் தொடர்புபடுத்துவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடும் வேலை என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.