​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க விலங்கியல் பூங்காவில் பிறந்த ஆப்பிரிக்க சிங்கக்குட்டிகள்

Published : Jul 12, 2018 2:30 PM

அமெரிக்க விலங்கியல் பூங்காவில் பிறந்த ஆப்பிரிக்க சிங்கக்குட்டிகள்

Jul 12, 2018 2:30 PM

அமெரிக்காவின் விலங்கியல் பூங்காவில் புதிதாகப் பிறந்த சிங்கக் குட்டிகள் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்டன.

image

தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ரிவர்பேங்க்ஸ் ((Riverbanks Zoo)) விலங்கியல் பூங்காவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தபிசா ((Thabisa)) என்று பெயரிடப்பட்ட ஆப்பிரிக்க பெண் சிங்கம் ஒன்று 3 பெண் குட்டிகளை ஈன்றது.

நல்ல உடல் நிலையுடன் இருந்த 3 குட்டிகளையும் பூங்கா ஊழியர்கள் மிகுந்த கவனத்துடன் பராமரித்து வந்தனர். 3 மாத வளர்ச்சிக்குப் பின் தற்போது அந்த சிங்கக் குட்டிகள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்த வெளிக்கு வந்தன.