​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பனிக்கரடியுடன் விரட்டி விளையாடிய புகைப்பட கலைஞர்

Published : Jul 12, 2018 2:28 PM

பனிக்கரடியுடன் விரட்டி விளையாடிய புகைப்பட கலைஞர்

Jul 12, 2018 2:28 PM

உலகின் மிகப்பெரிய பாலூட்டிகளில் ஒன்றான பனிக்கரடிகளை முதன்முறையாக வெகு அருகில் படம் பிடித்தும், அதனை விரட்டி விளையாடியும் புகைப்படக் கலைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். வனத்தில் இருக்கும் பனிக்கரடிகள் பொதுவாக மனிதர்களைக் கண்டால் ஒதுங்கிச் செல்லும் அல்லது தாக்கி உணவாக்கக் கூடும்.

ஆனால், ரஷ்யாவில் உள்ள கேப் கோஷவ்நிகோவ் ((Cape Kozhevnikov)) என்ற இடத்தில் பனிக்கரடி ஒன்றை மேக்ஸிம் டெமினோவ் ((Maxim Deminov)) என்பவர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது பனிக்கரடி அருகில் வருவதும் அதனை டெமினோவ் விரட்டி விளையாடியதும் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்திஉள்ளது.