​​ ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் 4,500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் - சட்டக் கமிஷனுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் 4,500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் - சட்டக் கமிஷனுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்


ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் 4,500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் - சட்டக் கமிஷனுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

Jul 12, 2018 6:23 AM

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்கு மட்டும் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் விருப்பத்திற்கு சட்ட ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு மாநிலக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் தேர்தல் நடத்த ஆகும் செலவுகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதியது. 

இதற்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள பதில் கடிதத்தில், மத்திய அரசின் ஒரே தேர்தல் அறிவிப்பால் தேர்தல் நடக்கும் போது ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளது. இதற்காக கூடுதலாக பல லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கவேண்டும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம் அதற்காக 4 ஆயிரத்து 555 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது. 

image

ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் 3 தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், அதன் பின்னர் புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு மேலும் சில ஆயிரம் கோடி ரூபாய் வரை தேவைப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. வரும் காலங்களில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது, அதற்கேற்றார்போல வாக்குப் பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.