​​ மருத்துவர்களுக்கு 6 மாத சோனோகிராபி பயிற்சி அரசாணைக்கு தடை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவர்களுக்கு 6 மாத சோனோகிராபி பயிற்சி அரசாணைக்கு தடை

மருத்துவர்களுக்கு 6 மாத சோனோகிராபி பயிற்சி அரசாணைக்கு தடை

Jul 12, 2018 2:26 AM

மருத்துவர்களுக்கு ஆறு மாத சோனோகிராபி பயிற்சி நடத்தி சான்றிதழ் வழங்குமாறு மருத்துவ கல்வி இயக்குனர் பிறப்பித்த அரசாணையை செயல்படுத்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஐயர்பங்களாவை சேர்ந்த மருத்துவர் ராஜகுமாரி தாக்கல் செய்த மனுவில், ரேடியாலஜிஸ்ட்டுகளும், சோனாலாஜிஸ்டுகளும் ஒன்றல்ல என உச்ச நீதிமன்றமும்,உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே   சட்டவிரோதமாக மருத்துவ கல்வி இயக்குனர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்களுக்கு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மருத்துவ கல்வி இயக்குனர் ஜூன் 12 ஆம் தேதி பிறப்பித்த அரசாணையை செயல்படுத்த ஆகஸ்ட் 13-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார்.