​​ சிறுவர்கள் மீட்பு மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த வெற்றி - தாய்லாந்து அரசு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுவர்கள் மீட்பு மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த வெற்றி - தாய்லாந்து அரசு

சிறுவர்கள் மீட்பு மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த வெற்றி - தாய்லாந்து அரசு

Jul 11, 2018 9:21 PM

குகையில் சிக்கிய சிறுவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடுகளை கடந்த மனித நேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று தாய்லாந்து அரசு கூறியுள்ளது.

image

பாங்காங் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு ராணுவ கமாண்டர் NARONGSAK OSOTTANAKORN இதனை தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் சிலருக்கு காய்ச்சல் இருப்பதாக கூறிய அவர் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்றுவிடுவார்கள் என்றார்.

image

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களை பெற்றோர் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த காட்சிகள் வெளியாகி உள்ளன. 18 நாட்கள் இருண்ட குகையில் இருந்ததால்,  சத்தான ஆகாரம் மற்றும் சிகிச்சை அளித்த பின்னர் சில நாட்களில் சிறுவர்கள் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.