​​ தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை..!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை..!

Jul 12, 2018 2:06 AM

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது சென்னை, தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மழை பெய்து வருகிறது.

 

காஞ்சிபுரத்தில் மாலையில் அதிக மேகமூட்டம் உருவான நிலையில் காந்திசாலை, காமராஜர் சாலை, வேடல், ஓரிக்கை, செவிலிமேடு, பூக்கடை சத்திரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.

 

இதே போன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து சுமார் 5 மணி நேரமாக சாரல் மழை பெய்வதோடு பலத்த காற்றும் வீசி வருகிறது இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.