​​ பட்டதாரி இளைஞர்களின் விவசாய புரட்சி..! மண்ணில்லா சாகுபடியில் இளைஞர்கள் சாதனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பட்டதாரி இளைஞர்களின் விவசாய புரட்சி..! மண்ணில்லா சாகுபடியில் இளைஞர்கள் சாதனை


பட்டதாரி இளைஞர்களின் விவசாய புரட்சி..! மண்ணில்லா சாகுபடியில் இளைஞர்கள் சாதனை

Jul 11, 2018 8:42 PM

விவசாயத்தை முதன்மையாக கொண்ட மண்ணில், வேளாண்மை பற்றிய புரிதல் இளைய தலைமுறையினருக்கு சற்று அதிகமாகவே இருக்கும் என்பதை பட்டதாரி இளைஞர்கள் நிரூபித்துள்ளனர். 

image

தர்மபுரி மாவட்டம் பொடுத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜதுரை, சோலைராஜன், சூரியபிரகாஷ், சதீஸ்குமார், புவனேஸ்வரன் ஆகியோர் தான் தற்காலத்து நவீன விவசாயிகள்...கார்ப்பரேட் நிறுவன வேலை வேண்டாம்...ஆடம்பர வாழ்க்கை எல்லாம் தற்காலிகமானவை என்பதை அறிந்து மண்ணில்லா விவசாயத்தை கையில் எடுத்துள்ளனர்.

image

ஒரு ஏக்கரில் தேங்காய் நார்களை கொண்டு சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தக்காளி சாகுபடியை செய்து வருகின்றனர். மண்ணிற்கு பதிலாக தேங்காய் நார்களை சேகரித்து அதை மக்கச் செய்து, இயற்கை உரங்களை பயன்படுத்துகிறார்கள். மண்ணில் விளைவிக்கப்படும் தக்காளி செடியின் ஆயுட்காலம் நான்கு மாதம் வரை தான். இந்த சாகுபடி மூலம் எட்டு மாதங்கள் வரை அறுவடை செய்யலாம்.

image

இதேபோல், தக்காளி 20 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்று கூறுகின்றனர். வெண்டை, மிளகாய், பாகற்காய் சாகுபடியிலும் இவர்கள் களமிறங்கியிருக்கின்றனர். மாடி தோட்டம் அமைப்பதற்கு மற்றவர்களுக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.

image

இன்றைய சூழலிலில், விவசாயம் என்றாலே ரசாயன உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் என்ற வேளாண்முறையை நினைவில் வரும். இதனால், நிலைத்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்றால் விவசாயிகள் மத்தியில் தெளிவான பதிலில்லை. பருவநிலை மாற்றத்தில் தொடங்கி பல்வேறு காரணங்களால் வேளாண்தொழிலில் பின் வாங்கிவரும் விவசாயிகளுக்கு தோல்கொடுக்கும் வகையில் பட்டதாரிகளின் இந்த முயற்சி, இளைஞர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.





  1. RAMKUMAR

    Super sir

    Reply
  2. Rajadurai

    Agriculture should become a biggest corporate company in Tamilnadu, so no one can play with farmers and their live and quality of life.

    Reply