​​ சென்ட்ரல் மெட்ரோ - பூங்கா ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுரங்கப்பாதை..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்ட்ரல் மெட்ரோ - பூங்கா ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுரங்கப்பாதை..!

சென்ட்ரல் மெட்ரோ - பூங்கா ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுரங்கப்பாதை..!

Jul 12, 2018 1:28 AM

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தையும், பூங்கா ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பூந்தமல்லி நெடுஞ்சாலையை பயணிகள் பாதுகாப்பாக கடக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் புறநகர் ரயில் நிலையத்தையும் சென்ட்ரல் ரயில் நிலைய முனையங்களையும் பயணிகள் பாதுகாப்பாக அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதையில் எஸ்கலேட்டர் மற்றும் படி வசதிகளும், கூடுதல் நுழைவு மற்றும் வெளியேற்ற வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.