​​ ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை

Jul 11, 2018 8:25 PM

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்ராவில், தீவிரவாதிகளுடன், பல மணி நேரமாக நடைபெறும் துப்பாக்கிச்சண்டையில், பாதுகாப்பு படை வீரர், வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.

குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை, பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் தொடுத்தனர்.

பதிலுக்கு தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இருதரப்புக்கும் இடையே நீடித்து வரும் துப்பாக்கிச்சண்டையில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.