​​ அடிப்படை வசதியில்லாத பள்ளிக்கு அங்கீகாரம் நீட்டித்தது எப்படி? - தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் விளக்கமளிக்க உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடிப்படை வசதியில்லாத பள்ளிக்கு அங்கீகாரம் நீட்டித்தது எப்படி? - தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் விளக்கமளிக்க உத்தரவு


அடிப்படை வசதியில்லாத பள்ளிக்கு அங்கீகாரம் நீட்டித்தது எப்படி? - தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் விளக்கமளிக்க உத்தரவு

Jul 11, 2018 8:17 PM

அடிப்படை வசதியில்லாத பள்ளிக்கு அங்கீகாரம் நீட்டித்தது எப்படி என வரும் 18ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தமிழக தொடக்கக் கல்வி இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி சென்னை, புழல் அருகேயுள்ள கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி செயல்பட்டு வருவதாக சின்னக் கொடுங்கையூரை சேர்ந்த சசிகுமார் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாணைக்கு வந்தபோது, பள்ளிக்கூடத்தின் தற்போதைய நிலையை விளக்கும் வகையில் மனுதாரர் தரப்பில் புகைப்படங்களும் தாக்கல் செய்யபட்டன.

புகைப்படங்களை பார்த்த நீதிபதி, கும்பகோணம் பள்ளி தீ விபத்தை போல மற்றொரு சம்பவம் நடந்தால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளிக்கு அங்கீகாரம் ஆண்டுதோறும் எப்படி நீட்டிக்கப்படுகிறது? என்பது குறித்து வரும் 18ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தமிழக தொடக்கக் கல்வி இயக்குனருக்கு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.