​​ போர்ச்சுக்கலில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வரும் இனிப்பு அருங்காட்சியகம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போர்ச்சுக்கலில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வரும் இனிப்பு அருங்காட்சியகம்

போர்ச்சுக்கலில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வரும் இனிப்பு அருங்காட்சியகம்

Jul 12, 2018 12:48 AM

போர்ச்சுக்கல் நாட்டில் புதிதாக திறக்கப்பட்ட இனிப்பு அருங்காட்சியகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்நாட்டின் லிஸ்பன் நகரில் திறக்கப்பட்டுள்ள இந்த காட்சியகத்தில் இனிப்பு வகைகளின் பெயர்களிலான ஆறு பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒன்றான இனிப்பு மிட்டாய் நீச்சல் குளத்தில் குதித்து மகிழ குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்புகின்றனர்.

image

இதே போன்று ஐஸ்கிரிம் அறை, மகிழ்ச்சி அரங்கு, இனிய  கனவு அறை என ஒவ்வொரு இடமும் மகிழ்ச்சியை அள்ளித் தருவதாக பார்வையாளர்கள் கூறியுள்ளது. இதே போன்று கண்ணுக்குள் காட்சிகளை காட்டி விளையாட தூண்டும் புதிய வெர்ச்சூவல் கேம்களுக்கும் அருங்காட்சியகத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.