​​ சத்துணவு முட்டை டெண்டருக்கு விண்ணப்பித்திருந்த 6 நிறுவனங்களின் டெண்டர் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சத்துணவு முட்டை டெண்டருக்கு விண்ணப்பித்திருந்த 6 நிறுவனங்களின் டெண்டர் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு


சத்துணவு முட்டை டெண்டருக்கு விண்ணப்பித்திருந்த 6 நிறுவனங்களின் டெண்டர் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Jul 11, 2018 7:27 PM

தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மையங்கள், பள்ளிகளில் உள்ள சத்துணவுக் கூடங்களுக்கு முட்டை வழங்குவதற்கான டெண்டருக்கு 6நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவை அனைத்துமே நிராகரிக்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மையங்கள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் உள்ள சத்துணவுக் கூடங்களுக்கு ஓராண்டுக்கு முட்டை வழங்குவதற்குத் தகுதியான நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டது.

சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் இன்று டெண்டருக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெற்றது. விண்ணப்பித்த 6 நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான கிறிஸ்டி குழுமத்துக்குச் சொந்தமான கிசான், சுவர்ணபூமி, நேச்சுரல்ஸ் ஆகிய 3 நிறுவனங்களும் அடங்கும்.

சிறீதர் பாபு முட்டை விற்பனை நிறுவனம், மாருதி அக்ரோ, நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியனவும் இந்த டெண்டரைப் பெற விண்ணப்பித்திருந்தன.

இந்நிலையில் விண்ணப்பித்த 6நிறுவனங்களுக்குமே டெண்டர் வழங்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. டெண்டர் படிவத்தில் தாய்சேய் முத்திரை இல்லை என்பதற்காக அவை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.