​​ 2013-2016 கால கட்டங்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு - மு.க.ஸ்டாலின்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2013-2016 கால கட்டங்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு - மு.க.ஸ்டாலின்


2013-2016 கால கட்டங்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு - மு.க.ஸ்டாலின்

Jul 11, 2018 6:37 PM

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், தமிழகத்தில் தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் இழப்பு என சிஏஜி அறிக்கை தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் ஆயிரத்து 599.81 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1500கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். இல்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.