​​ சலவை ஆலைக் கழிவுகள் கலப்பால், நொய்யலாற்றில் நுரை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சலவை ஆலைக் கழிவுகள் கலப்பால், நொய்யலாற்றில் நுரை


சலவை ஆலைக் கழிவுகள் கலப்பால், நொய்யலாற்றில் நுரை

Jul 11, 2018 5:15 PM

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே சலவை ஆலைக் கழிவுகள் கலப்பால், நொய்யலாற்றில் நுரை பொங்கி எழுகிறது. 

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணைகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிந்தோடுகிறது. இந்த நிலையில், குனியமுத்தூர் அருகேயுள்ள அணை மேடு பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து விழும் நீரில் நுரை பொங்கி எழுகிறது.

image

புட்டுவிக்கி பகுதியில் செயல்படும் சலவை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நீர்வரத்து அதிகரித்து இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, இரு தினங்களாக சலவை ஆலையில் இருந்து ஆற்றில் கழிவுகள் வெளியேற்றப்படுவதாகவும், இதன் காரணமாகவே நுரை அதிகளவில் பொங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.

image

நுரையானது ஆத்துப்பாலம், கரும்புக் காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவுவதால் சரும பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தோலில் நுரை பட்டு அரிப்பு உண்டாகி, புண் ஏற்படுவதாகவும் கூறியுள்ள அப்பகுதி மக்கள், சலவை ஆலை மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.