​​ விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு

விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Jul 11, 2018 2:49 PM

ஆட்சி பொறுப்பில் இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மாலவுட் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அள்ளி வீசி காங்கிரஸ் கட்சி விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக குறிப்பிட்டார். ஆனால் தற்போது மத்திய அரசு விவசாயிகளின் நலனை காக்க பல திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக கூறிய மோடி, விவசாயிகள் இப்போது நிம்மதியாக தூங்குவதாகவும், எதிர்க்கட்சிகள் தான் தூக்கம் இழந்து தவிப்பதாகவும் தெரிவித்தார். 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக மோடி கூறினார்.