செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அதிவேகமாக சென்ற கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
செம்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தனது பைக்கில் சென்றபோது, சுண்ணாம்பு கால்வாய் என்ற இடத்தில் சாலையை கடந்துள்ளார்.
அப்போது, அவ்வழியே அதிவேகமாக சென்ற கார் மோதியதில், பைக்கில் சென்ற மோகன் ராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரை பறிமுதல் செய்த போலீசார், அதன் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.