​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பரப்புவதாக தயாரிப்பு நிறுவனம், நடிகர் நவாசுதீன் சித்திக் மீது காங். வழக்கு

Published : Jul 11, 2018 1:21 PM

ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பரப்புவதாக தயாரிப்பு நிறுவனம், நடிகர் நவாசுதீன் சித்திக் மீது காங். வழக்கு

Jul 11, 2018 1:21 PM

ராஜீவ் காந்தியை குறித்த அவதூறு பரப்புவதாக நெட்பிளிக்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.imageமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கோழை என்றும் போபர்ஸ் ஊழலில் பங்குடையவர் என்றும் sacred games  என்ற தொலைக்காட்சித் தொடரில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சார்பில் கொல்கத்தாவின் கிரிஷ் பார்க் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விக்ரம் சந்திராவின் நாவலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இத்தொடர், ஒரு மணி நேரம் வீதம் இதுவரை எட்டு அத்தியாங்களை ஒளிபரப்பியுள்ளது.

சைப் அலிகான், ராதிகா ஆப்தே, நவாசுதீன் சித்திக் நடித்துள்ள இத்தொடரில்தான் ராஜீவ் காந்தி மீது அவதூறு பரப்பப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.