​​ அமித்ஷா ஊழல் பற்றி கூறியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்திருப்பார்-ஜெயக்குமார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமித்ஷா ஊழல் பற்றி கூறியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்திருப்பார்-ஜெயக்குமார்

அமித்ஷா ஊழல் பற்றி கூறியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்திருப்பார்-ஜெயக்குமார்

Jul 10, 2018 6:18 PM

நுண்ணீர் பாசனம் என அமித்ஷா பேசியதை எச்.ராஜா சிறுநீர் பாசனம் என மொழிபெயர்த்ததைப் போன்று, அமித்ஷா ஊழல் பற்றி கூறியதையும் எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்திருக்கக் கூடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

வருமான வரித்துறை கைப்பற்றிய டைரியில் அமைச்சர்களின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுவதாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஊகத்தின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது எனக் கூறிய ஜெயக்குமார், மடியில் கனம் இருப்பவர்கள்தான் அதற்கு பயப்படுவார்கள் என்று கூறினார்.