​​ இன்னும் அமைக்கப்படாத ஜியோ கல்வி நிறுவனம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்னும் அமைக்கப்படாத ஜியோ கல்வி நிறுவனம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு

Published : Jul 10, 2018 4:54 PMஇன்னும் அமைக்கப்படாத ஜியோ கல்வி நிறுவனம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு

Jul 10, 2018 4:54 PM

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஜியோ கல்வி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருப்பது நோக்கக் கடிதம் தான் என்றும், 3ஆண்டுகளில் நிறுவனத்தை அமைத்தால் மட்டுமே அதற்குச் சிறந்த கல்வி நிறுவனத் தகுதி வழங்கப்படும் என மத்திய அரசின் உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

image

உலகத் தரவரிசையில் இடம்பெறுவதற்காக இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு தேர்ந்தெடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள டெல்லி ஐஐடி, மும்பை ஐஐடி, பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவை அரசின் கல்வி நிறுவனங்களாகும்.

பிட்ஸ் பிலானி, மணிப்பால் பல்கலைக்கழகம், ஜியோ கல்வி நிறுவனம் ஆகியவை தனியார் கல்வி நிறுவனங்களாகும். இவற்றில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஜியோ கல்வி நிறுவனம் இன்னும் தொடங்கப்படவே இல்லை. பசுமைவெளித் தனியார் நிறுவனங்கள் என்னும் பிரிவில் ஜியோ கல்வி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழுள்ள உயர்கல்வித்துறைச் செயலாளர் சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.

சிறந்த கல்வி நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும், தனியார் நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். ஜியோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருப்பது நோக்கக் கடிதம் தான் என்றும், 3ஆண்டுகளில் அந்த நிறுவனம் தொடங்கப்பட்டால் மட்டுமே சிறந்த நிறுவனம் என்கிற தகுதி பெறும் என்றும் சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.