அமெரிக்க தொழில் அதிபர் எலன் மஸ்கின் நியூராலிங் நிறுவனம், விலங்குகளை துன்புறுத்தி கொன்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, விசாரணையை எதிர்கொண்டுள்ளது.
மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி, அதன் மூலம் கணிணியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக நியூராலிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் விலங்குகள் மூலம் நடத்தி வரும் பரிசோதனையில், 280 செம்மறி ஆடுகள் உள்ளிட்ட 1500 விலங்குகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டு இருப்பதாகவும், இந்த சோதனைகள் அவசரகதியில் நடைபெற்றதாகும் என நியூராலிங்க் ஊழியர்களே புகார் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் அமெரிக்க பெடரல் புலனாய்வுதுறையினர் தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர்.