​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அம்பேத்கரின் 66-வது நினைவு தினம்: சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

Published : Dec 06, 2022 1:01 PM

அம்பேத்கரின் 66-வது நினைவு தினம்: சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

Dec 06, 2022 1:01 PM

அண்ணல் அம்பேத்கரின் போராட்டங்கள், லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளித்ததாக, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

அம்பேத்கரின் 66-வது நினைவுதினத்தையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி,  குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தங்கர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தேசத்திற்காக அம்பேத்கர் ஆற்றிய ஒப்பற்ற சேவையை நினைவுகூர்வதாக, டிவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, நாட்டின் விரிவான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட பணிகளை ஒருபோதும் மறக்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.