​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு

Published : Dec 06, 2022 12:17 PM

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு

Dec 06, 2022 12:17 PM

சீனாவின் வர்த்தக மையமான ஷாங்காய் நகரில், மக்கள் பொது இடங்களுக்கு செல்ல, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு இன்று முதல் தளர்த்தப்பட்டது.

சீனாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததற்கு மத்தியில், கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி, மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதன் எதிரொலியாக, பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டதோடு, கொரோனா பரிசோதனை மையங்களும் மூடப்பட்டன. அந்த வகையில், ஷாங்காயிலும் இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.