​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா.. இன்று ஏற்றப்பட்டது பரணி தீபம்..!

Published : Dec 06, 2022 10:59 AM

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா.. இன்று ஏற்றப்பட்டது பரணி தீபம்..!

Dec 06, 2022 10:59 AM

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இவ்விழாவின் 10 வது நாளான இன்று அதிகாலை சுவாமி, அம்பாள்  மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியின் கருவரை முன்புள்ள பிரதோஷச நந்தி சிலை  அருகில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் சேகர்பாபு, ஆட்சியர் முருகேஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.