​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா.. தீபம் ஏற்றி முருகப்பெருமானை தரிசனம் செய்த பக்தர்கள்..!

Published : Dec 06, 2022 10:22 AM

திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா.. தீபம் ஏற்றி முருகப்பெருமானை தரிசனம் செய்த பக்தர்கள்..!

Dec 06, 2022 10:22 AM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

நேற்றிரவு முருகன் மலைக் கோயிலில் உள்ள மூலவர் முருகப்பெருமான் உற்சவர் விநாயகர், வள்ளி, தெய்வானை, ஏகாம்பர ஈஸ்வரர், உற்சவர் ஆறுமுகர் ஆகிய சன்னதிகள் மற்றும் கொடிமரம் ஆகிய இடங்களில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து இன்று மாலை, 6 மணி அளவில் செம்பு கொப்பரையில் பச்சரிசி மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.