​​ டங்கல் திரைப்படம் பார்த்த தென்கொரிய அதிபரின் மனைவி படத்தின் நிஜ நாயகர்களை தேநீர் விருந்துக்கு அழைத்தார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டங்கல் திரைப்படம் பார்த்த தென்கொரிய அதிபரின் மனைவி படத்தின் நிஜ நாயகர்களை தேநீர் விருந்துக்கு அழைத்தார்

Published : Jul 09, 2018 8:43 PM

டங்கல் திரைப்படம் பார்த்த தென்கொரிய அதிபரின் மனைவி படத்தின் நிஜ நாயகர்களை தேநீர் விருந்துக்கு அழைத்தார்

Jul 09, 2018 8:43 PM

நடிகர் அமீர் கானின் டங்கல் திரைப்படத்தை பார்த்த தென்கொரிய அதிபரின் மனைவி, திரைப்படத்தின் நிஜ நாயகர்களான போகாத் குடும்பத்தினரை நேரில் சந்திக்கவுள்ளார்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் இந்தியா வந்துள்ள அவரது மனைவி (Kim Jung-sook) கிம் ஜங் ஷூக், டங்கல் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார். படத்தை பார்த்து முடித்த பின்னர், படத்தில் கூறப்படும் நிஜ நாயகர்களான மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகாத் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து தேநீர் விருந்து அளிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதுகுறித்து அந்நாட்டு தூதரகம் வாயிலாக மகாவீர் சிங் போகாத் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள மகாவீர் சிங் போகாத்தின் குடும்பத்தினர், தென் கொரிய அதிபரின் மனைவியுடனான சந்திப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.