​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி

Published : Nov 26, 2022 7:42 PM

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி

Nov 26, 2022 7:42 PM

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகங்களிலும் வரும் திங்கள்கிழமை முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பண்டிகை நாட்கள் தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை சிறப்பு முகாம்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி வரை ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.