​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரிட்டிஷ் கிராண்ட் பிரி கார்பந்தயப் போட்டியில் ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன்

Published : Jul 09, 2018 12:39 PM



பிரிட்டிஷ் கிராண்ட் பிரி கார்பந்தயப் போட்டியில் ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன்

Jul 09, 2018 12:39 PM

பிரிட்டிஷ் கிராண்ட்பிரி கார்பந்தயப் போட்டியில் ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நடப்பு சீசனில் 10-வது பார்முலா ஒன் போட்டியான பிரிட்டிஷ் கிராண்ட் பிரி கார்பந்தயம், சில்வர்ஸ்டோன் நகரில் நேற்று நடைபெற்றது.

முன்னணி வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், எரிக்சன், கார்லோஸ் செயின்ஸ், கிராஸ்ஜீன் ஆகியோரின் கார்கள் மைதானத்தில் மோதியதால் பின்தங்கினர்.

பெராரி அணியின் செபஸ்டியன் வெட்டல் ஒரு மணி 27 நிமிடம் 29 வினாடிகளில், 306 கிலோ மீட்டர் பந்தய தூரத்தைக் கடந்து சாம்பியன் பட்டம் வென்றார். ஹாமில்டன், ரெய்க்கோனன் அடுத்தடுத்த இடங்களில் வந்தனர்.

நடப்பு சீசனில் 171 புள்ளிகளுடன் வெட்டல் முதலிடத்திலும், ஹாமில்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.