​​ இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா

Published : Jul 09, 2018 11:23 AM

இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா

Jul 09, 2018 11:23 AM

இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

பிரிஸ்டல் ((Bristol)) நகரில் நடந்த கடைசி மற்றும் 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் ((Jason Roy)) 67 ரன்கள் எடுத்தார்.

199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தவான், கே.எல். ராகுல் ஏமாற்றம் அளித்தனர். ஆனால், விராட் கோலி - ரோகித் சர்மா ஜோடி இங்கிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தது. 43 ரன்களில் கோலி அவுட் ஆக, மறுமுனையில் பவுண்டரி, சிக்சர்களை விளாசினார் ரோகித் சர்மா.

18.4 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது.

அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றார்.