​​ நொய்டாவில் புதிய சாம்சங் தொழிற்சாலையை பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் இணைந்து திறக்கின்றனர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நொய்டாவில் புதிய சாம்சங் தொழிற்சாலையை பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் இணைந்து திறக்கின்றனர்

Published : Jul 09, 2018 1:50 AMநொய்டாவில் புதிய சாம்சங் தொழிற்சாலையை பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் இணைந்து திறக்கின்றனர்

Jul 09, 2018 1:50 AM

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாம்சங் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திரமோடி, தென்கொரிய அதிபருடன் இணைந்து திங்கட்கிழமை திறந்து வைக்க இருக்கிறார்.

இதையொட்டி தென்கொரிய அதிபர் மூன்ஜே இன் மாலையில் விமானம் மூலம் டெல்லி வந்தார். 1990 ஆம் ஆண்டு சாம்சங் தொழிற்சாலை நொய்டாவில் அமைக்கப்பட்டு, 1997 முதல் தொலைக்காட்சிகளை உற்பத்தி செய்ய தொடங்கியது. இந்த நிலையில் சுமார் 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய ஆலை, 35 ஏக்கர் பரப்பளவில் நொய்டாவில் அமைந்துள்ளது.

இந்த ஆலையின் மூலம் இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை ஆண்டுக்கு 12 கோடி என்ற அளவில் இருமடங்கு அதிகரிப்பதுடன், மற்ற எலக்ட்ரானிக்  சாதனங்களின் உற்பத்தியை உயர்த்தவும் சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.