​​ டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்த வாரத்தில் 70 ரூபாயை எட்டக் கூடும் - வங்கி அதிகாரிகள் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்த வாரத்தில் 70 ரூபாயை எட்டக் கூடும் - வங்கி அதிகாரிகள் தகவல்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்த வாரத்தில் 70 ரூபாயை எட்டக் கூடும் - வங்கி அதிகாரிகள் தகவல்

Jul 08, 2018 11:41 PM

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்த வாரத்தில் 70 ரூபாயை எட்டக் கூடும் என வங்கிகள் கணித்துள்ளன. தற்போது ஒரு டாலரின் மதிப்பு 68 ரூபாய் 76 காசுகளாக உள்ளன. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் காரணமாக ஆசிய நாடுகளின் பணமதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து வருவதாக வங்கிகள் கூறியுள்ளன. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அந்நிய முதலீடு குறைவது ஆகிய காரணங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் எனக் கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் வாங்கும் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான டாலர் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் ரூபாயின் மதிப்பு 70 ரூபாய் அளவுக்கு வீழ்ச்சி அடையக் கூடும் என்று என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.