​​ முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை

Jul 08, 2018 1:19 PM

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் வைரநகைகள் மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

image

ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் உள்ளது. இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வைர நகைகள் திருட்டுப் போனதாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதும், முகத்தை மறைத்துக் கொண்டு யாரோ அறைக்குள் செல்லும் காட்சியும் பதிவாகி உள்ளது. வீட்டில் வேலை செய்பவர்களில் யாரோ திருடியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரத்தின் வீட்டிற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.