​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு

Published : Jul 08, 2018 12:21 AM

திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு

Jul 08, 2018 12:21 AM

திருப்பூர் மாவட்டம் மாவட்டம் முழுவதும் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற விழாவில் 100 சதவீத தேர்ச்சியடைந்த 216 பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவுக் கேடயங்களை வழங்கினார். மேலும் மாணவர்களின் 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமாக இருந்த ஆயிரத்து 687 ஆசிரியர்கள், விடுப்பின்றி 100 சதவீதம் வருகை புரிந்த 3 ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற 6 ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.