​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் திடீர் தடை

Published : Jul 07, 2018 10:42 PM



தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் திடீர் தடை

Jul 07, 2018 10:42 PM

தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டதால் வேலூர் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் வரவேற்பு அதிகம். அங்குள்ள தனியார் ஜூஸ் நிறுவனங்கள், தமிழக மாம்பழங்களை அதிகளவில் கொள்முதல் செய்கின்றன.

இதை கண்டித்து, ஆந்திர விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், தமிழக மாம்பழங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள வேலூர் மாவட்ட மாங்கனி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழக மாம்பழ லாரிகளை எல்லையிலேயே ஆந்திர போலீசார் திருப்பி அனுப்புவதால் வெட்டவெளியில் மாம்பழங்களை கொட்டி வைத்துள்ளனர். சுமார் 30 ஆயிரம் டன் மாம்பழங்கள் தேக்கம் அடைந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.