​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பலத்த காற்றால் நடுக்கடலில் சிக்கத்தவித்த ரஷ்ய தம்பதி

Published : Jul 07, 2018 7:50 PM

பலத்த காற்றால் நடுக்கடலில் சிக்கத்தவித்த ரஷ்ய தம்பதி

Jul 07, 2018 7:50 PM

தாய்லாந்தின் Phuket தீவில் அலைச்சறுக்கிற்காக பயன்படும் சிறிய ரக மோட்டார் படகில் பயணம் மேற்கொண்ட தம்பதியர் நடுக்கடலில் சிக்கித்தவித்த நிலையில், சுற்றுலா படகில் சென்றவர்கள் மீட்டனர்.

இருவர் மட்டுமே பயணிக்க க்கூடிய சிறிய வகை, மோட்டார் படகில் தங்களின் பயணத்தை துவங்கிய ரஷ்ய தம்பதியர் நடுக்கடலில் சென்ற போது பலத்த காற்றினால் கடலின் நடுவே சிக்கித்தவித்தனர்.

ஆபத்தான நிலையில், சிக்கியிருந்த அவர்களை அப்பகுதி வழியாக பயணித்த சீனாவின் சுற்றுலா படகில் இருந்தவர்கள் கண்ட நிலையில், அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். கடுமையான காற்றின் நடுவே, சிக்கியிருந்த அவர்களின் அலைச்சறுக்கு வாகனத்தின் அருகே படகு செலுத்தப்பட்டு பின் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.