​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்குமாறு பரிந்துரை ஏதும் செய்யவில்லை - பி.எஸ்.சவுகான்

Published : Jul 07, 2018 3:30 PM

பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்குமாறு பரிந்துரை ஏதும் செய்யவில்லை - பி.எஸ்.சவுகான்

Jul 07, 2018 3:30 PM

பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டங்களுக்கு முற்றாகத் தடை விதிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அதை சட்டபூர்வமாக்குமாறு பரிந்துரை செய்ததாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது என்று, சட்ட ஆணையத்தின் தலைவர் பி.எஸ்.சவுகான் ((BS Chauhan)) விளக்கம் அளித்துள்ளார்.

கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளின்போது பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்குமாறு பரிந்துரை ஏதும் செய்யவில்லை என அவர் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக பந்தயம் கட்டுவதும், சூதாட்டமும் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும் என்றே பரிந்துரை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

முழுமையாக தடை விதிக்க இயலாத சூழலில், வேறுவழியின்றி பந்தயம் கட்டுதலையும், சூதாட்டத்தையும் சட்டபூர்வமாக்கி விடலாம் என மத்திய, மாநில அரசுகள் கருதுமேயானால், அப்போது அவற்றை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதற்குரிய வழிமுறைகளை குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாகவும் பி.எஸ்.சவுகான் குறிப்பிட்டுள்ளார்.