​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பையில் ரிலையன்ஸ் மருத்துவமனை மற்றும் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published : Oct 06, 2022 6:33 AM

மும்பையில் ரிலையன்ஸ் மருத்துவமனை மற்றும் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு வெடிகுண்டு மிரட்டல்

Oct 06, 2022 6:33 AM

மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனை மற்றும் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

மருத்துவமனையை வெடிவைத்து தகர்க்கப் போவதாக மர்ம தொலைபேசி மிரட்டலை.டுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனையில் சோதனையிட்டனர். இதே போன்று முகேஷ் அம்பானி நீதா அம்பானி உள்ளிட்ட குடும்பத்தினரைக் கொல்லப் போவதாகவும் மிரட்டல் அழைப்பு வந்தது.

இதையடுத்து அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.விரைவில் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து விடுவோம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்