யூடியூப் தளத்தில் 4கே தரத்திலான வீடியோக்களை பார்ப்பதற்கு கட்டண நடைமுறையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் இருக்கும் சமூக வலைதளங்களில் யூடியூப் தளமும் ஒன்று. வீடியோக்களை பார்க்கும் போது இடையில் வரும் விளம்பரங்களை தவிர்க்க, சந்தா தொகை கட்டி பிரீமியம் பயனாளர் விளம்பர இடையூறுகள் இன்றி வீடியோ பார்க்கும் வசதி பெறுகின்றனர்.
இந்நிலையில், பிரீமியம் அல்லாத பயனாளர்கள் 4கே வீடியோவை பார்க்க முயன்றபோது கட்டுப்பாடுகளுடன் கூடிய நிபந்தனை ஸ்கிரீனில் தோன்றியதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ரெடிட் சமூக வலைதளத்தில் இதுதொடர்பான புகாரை பயனாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.