​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏழுமலையான் கோயிலில் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு

Published : Oct 05, 2022 9:26 PM

ஏழுமலையான் கோயிலில் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு

Oct 05, 2022 9:26 PM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது. 

பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், தங்க பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சாமி வீதி உலா நிகழ்வும் நடைபெற்றது.

பின்னர் கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்க கொடிமரத்தில் இருந்து கருடாழ்வார் உருவப்படம் கீழே இறக்கப்பட்டது.