​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Published : Oct 05, 2022 8:51 PM

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Oct 05, 2022 8:51 PM

புதுச்சேரியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி இளங்கோ நகரை சேர்ந்த பிரசன்னகுமாரி, இன்று உடல்நிலை சரியில்லாததால், மகன் விஜய் லால் உடன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே அதிவேகமாக வந்த கார் அந்த ஆட்டோ மீது மோதிய விபத்தில், பிரசன்னகுமாரி உயிரிழந்தார்.

விஜயலால் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மணிமாறன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருங்களத்தூர் தனியார் கல்லூரியில் படிக்கும், கேரளாவை சேர்ந்த 8 மாணவர்கள் புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா வந்த போது அவர்களின் கார் விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்ததையடுத்து, போலீசார், காரை ஒட்டி வந்த, மாணவர் மஹாதீர்ரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.